< Back
தேசிய செய்திகள்
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தனியார் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தேசிய செய்திகள்

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தனியார் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தினத்தந்தி
|
27 Dec 2022 4:07 PM IST

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தனியார் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.



புதுடெல்லி,


டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஜெய்சால்மர் நகரில் இருந்து தனியார் நிறுவன விமானம் ஒன்று வந்திறங்கியது. அந்த விமானத்தின் சீட்டின் (இருக்கை) பின்புறம் துணி மீது இந்தியில், இந்த விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது என்ற பொருள்பட தகவல் எழுதப்பட்டு இருந்துள்ளது.

இதனை கவனித்த பயணி ஒருவர் மற்றவர்களிடம் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து, அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். உடனடியாக ஸ்பைஸ்ஜெட் தனியார் விமான நிறுவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.

இதன்பின் விமானம் தனியான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. டெல்லி போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமானம் முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

ஏறக்குறைய 2 மணிநேரம் இந்த பணியில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால், அந்த விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும் அது வெறும் புரளி என்பதும் பின்னர் தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் செய்தியை எழுதிய நபர் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்