< Back
தேசிய செய்திகள்
மங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தேசிய செய்திகள்

மங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தினத்தந்தி
|
29 Dec 2023 11:31 AM IST

விமானம் ஒன்றில் வெடிகுண்டு வைத்துவிட்டோம், இன்னும் சில மணி நேரங்களில் அது வெடிக்கும் என மின்னஞ்சல் வந்தது.

மங்களூர்,

மங்களூர் விமான நிலைய அதிகாரிகளுக்கு கடந்த புதன்கிழமை காலை 11.20 மணியளவில் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் நாங்கள் ஒரு தீவிரவாதக்குழு. எங்கள் பெயர் ஃபன்னிங், நாங்கள் விமான நிலையத்திற்குள் இருக்கும் விமானம் ஒன்றில் வெடிகுண்டு வைத்துவிட்டோம், இன்னும் சில மணி நேரங்களில் அது வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த இணைய மிரட்டலைக்கண்ட விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் முழு பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அனைவரிடமும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மின்னஞ்சல் அனுப்பிய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடிவருகின்றனர். நாட்டின் பல்வேறு சர்வதேச விமான நிலையங்களுக்கு இதுபோன்ற மின்னஞ்சல் வழி வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்