< Back
தேசிய செய்திகள்
சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தேசிய செய்திகள்

சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தினத்தந்தி
|
19 Jun 2024 9:50 AM IST

சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

சென்னையில் இருந்து மும்பை செல்வதற்காக புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு நேற்று மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். அந்த விமானம் நேற்று இரவு 10.30 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர் அதில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும் விமானத்தை தனிமைப்படுத்தப்பட்ட வழித்தடத்திற்கு விமானிகள் கொண்டு சென்றனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகள் விமானம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதே போல் மும்பை பெருநகர மாநகராட்சி தலைமையகத்திற்கும் நேற்று மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்