< Back
தேசிய செய்திகள்
ஜெய்ப்பூரில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தேசிய செய்திகள்

ஜெய்ப்பூரில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தினத்தந்தி
|
13 May 2024 11:35 AM IST

ஜெய்ப்பூரில் பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள செயின்ட் தெரசா பள்ளி, எம்.பி.எஸ். பள்ளி, வித்யாஷ்ரம் பள்ளி மற்றும் மனக் சவுக் பள்ளி ஆகிய 4 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுனர்கள் பள்ளியில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வெளியேற்றிவிட்டு, பள்ளிகள் முழுக்க சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த 1ம் தேதி டெல்லியில் உள்ள 100 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்