< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் உள்ள 4 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தேசிய செய்திகள்

டெல்லியில் உள்ள 4 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தினத்தந்தி
|
14 May 2024 3:34 PM IST

டெல்லியில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து வெடிகுண்டு சோதனை நிபுணர்கள், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையிலான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்வேறு மருத்துவமனைகள், விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருந்தன.

அது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், அந்த மிரட்டல்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும் செய்திகள்