< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்:  ரஷியாவில் இருந்து இ-மெயில் வந்தது கண்டுபிடிப்பு
தேசிய செய்திகள்

பெங்களூருவில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ரஷியாவில் இருந்து இ-மெயில் வந்தது கண்டுபிடிப்பு

தினத்தந்தி
|
24 May 2022 2:29 AM IST

பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ரஷியாவில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு

பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கடந்த மாதம்(ஏப்ரல்) மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர். இந்த சம்பவம் பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பள்ளிகளுக்கு வந்த இ-மெயில் ரஷ்யாவில் இருந்து வந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அந்த இ-மெயில் அனுப்பியவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அந்த மிரட்டல் தமிழக வாலிபர் ஒருவர் உருவாக்கிய மென்பொருள் மூலமாக வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தமிழக வாலிபரிடம் பெங்களூரு போலீசார் விசாரிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்