< Back
தேசிய செய்திகள்
மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர சோதனை
தேசிய செய்திகள்

மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர சோதனை

தினத்தந்தி
|
14 Oct 2022 8:31 AM IST

மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது.

புதுடெல்லி,

மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதனையடுத்து அதிகாலை 3.20 மணியளவில் விமானம் டெல்லியில் தரையிறங்கியயவுடன், உடனடியாக அதிலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். அதன் பின், விமானம் சோதனை செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து டெல்லி போலீசார் கூறுகையில், மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கு வந்த எஸ் யு 232 என்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக நேற்றிரவு 11.30 மணியளவில் மிரட்டல் வந்தது. உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விமானத்தில் பயணித்த 386 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்