< Back
தேசிய செய்திகள்
டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தேசிய செய்திகள்

டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தினத்தந்தி
|
18 Jun 2024 1:15 PM IST

டெல்லியில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று காலை 9:35 மணிக்கு மர்ம நபர்கள் அனுப்பிய இ-மெயில் வந்தது. அதில் டெல்லியில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சந்தேகப்படும்படியான எதுவும் கிடைக்கவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லி-துபாய் விமானத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது புரளி என்பது தெரிய வந்துள்ளது. மிரட்டல் வந்த இ-மெயில் முகவரியை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்