< Back
தேசிய செய்திகள்
டெல்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி - அதிகாரிகள் தீவிர சோதனை
தேசிய செய்திகள்

டெல்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி - அதிகாரிகள் தீவிர சோதனை

தினத்தந்தி
|
13 Jan 2023 6:04 AM IST

டெல்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளியடுத்து அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

புதுடெல்லி,

டெல்லி விமான நிலையத்தில் இருந்து புனே செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று நேற்று மாலையில் பயணிகளை ஏற்றுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது.

அப்போது விமான நிலையத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

உடனடியாக உஷாரான அதிகாரிகள், அந்த விமானத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சந்தேகப்படும் வகையிலான எந்த பொருளும் சிக்கவில்லை. இதன் மூலம் அந்த தகவல் வெறும் புரளி என தெரியவந்தது. இந்த சம்பவத்தால் டெல்லி விமான நிலையத்தில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்