< Back
தேசிய செய்திகள்
அவுரங்காபாத்தில் உள்ள மும்பை ஐகோர்ட்டு கட்டிடத்தில் வெடிகுண்டு இருப்பதாக அழைப்பு விடுத்த நபரால் பரபரப்பு
தேசிய செய்திகள்

அவுரங்காபாத்தில் உள்ள மும்பை ஐகோர்ட்டு கட்டிடத்தில் வெடிகுண்டு இருப்பதாக அழைப்பு விடுத்த நபரால் பரபரப்பு

தினத்தந்தி
|
15 Feb 2023 3:17 PM IST

அவுரங்காபாத்தில் உள்ள மும்பை ஐகோர்ட்டு கட்டிடத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி அழைப்பு விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

அவுரங்காபாத்,

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் பெஞ்ச் வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று மாலை 5.45 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பீகாரில் இருந்து ஒரு மிரட்டல் அழைப்பு வந்தது.

அப்போது பேசிய நபர் "நான் பணம் செலுத்திவிட்டேன். என்னுடைய வேலை நடக்கவில்லை. அதனால் ஐகோர்ட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன்" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து விரைந்து வந்த வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவினர் ஐகோர்ட்டு வளாகத்தில் விரிவான சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அந்த அழைப்பு புரளி என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இதுவரை எந்த குற்றமும் பதிவு செய்யப்படவில்லை என்று புண்டலிக் நகர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்