< Back
தேசிய செய்திகள்
பஞ்சாபில் ராணுவ மைதானத்தில் வெடிகுண்டு கண்டெடுப்பு: போலீசார் விசாரணை
தேசிய செய்திகள்

பஞ்சாபில் ராணுவ மைதானத்தில் வெடிகுண்டு கண்டெடுப்பு: போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
19 Jan 2023 6:24 AM IST

குடியரசு தினம் நெருங்கிவரும் நிலையில் இந்த வெடிகுண்டை வைத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லூதியானா,

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கன்னா நகரில் அமைந்துள்ள ராணுவ மைதானத்தில் இருந்து வெடிகுண்டு குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ஹர்பால் சிங் தெரிவித்தார்.

இந்த வெடிகுண்டை செயலிழக்க ஜலந்தரில் இருந்து ஒரு குழு வந்துள்ளது என்றும் அவர் கூறினார். குடியரசு தினம் நெருங்கிவரும் நிலையில் இந்த வெடிகுண்டை வைத்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக ஜனவரி 3 ஆம் தேதி, மாநில முதல் மந்திரி பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்