< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரகாண்ட் முதல்-மந்திரியுடன் பிரபல பாலிவுட் நடிகர்கள் சந்திப்பு
|19 March 2024 9:39 AM IST
ராஜ்குமார் ராவ், மல்லிகா ஷெராவத் உள்ளிட்டோர் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியை சந்தித்து பேசினர்.
டேராடூன்,
உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியை அவரது இல்லத்தில் பாலிவுட் நடிகர்கள் ராஜ்குமார் ராவ், விஜய் ராஜ், நடிகைகள் திரிப்தி திம்ரி, மல்லிகா ஷெராவத் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் திரைப்பட தயாரிப்பை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட்டில் திரைப்பட தயாரிப்பு மற்றும் படப்பிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசு புதிய கொள்கைகளை வகுத்துள்ளதாகவும், இதனால் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.