< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இரும்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து - 22 பேர் படுகாயம்
|24 Aug 2024 5:47 PM IST
இரும்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 22 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் ஜல்னா பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 22 தொழிலாளர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. பாய்லர் வெடித்தபோது உருகிய இரும்புக் குழம்பு தொழிலாளர்கள் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.