< Back
தேசிய செய்திகள்
நேத்ராவதி ஆற்றில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் உடல் மீட்பு;  தற்கொலையா? போலீஸ் விசாரணை
தேசிய செய்திகள்

நேத்ராவதி ஆற்றில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் உடல் மீட்பு; தற்கொலையா? போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
25 July 2022 8:30 PM IST

நேத்ராவதி ஆற்றில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் உடல் மீட்கப்பட்டது. இது தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மங்களூரு;

மங்களூருவை சேர்ந்தவர் விஸ்வநாதா (வயது 65). இவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ரத்த அழுத்தத்தை பரிசோதிக்க செல்வதாக கூறிவிட்டு அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், அதன்பிறகு விஸ்வநாதா வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அந்தப்பகுதியில் உள்ள நேத்ராவதி ஆற்றில் அவர் பிணமாக மிதந்தார்.

இதுபற்றி அறிந்ததும் போலீசார் விஸ்வநாதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து மங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்