< Back
தேசிய செய்திகள்
கொல்கத்தா மருத்துவமனையில் பெண் முதுகலை பயிற்சி மருத்துவரின் உடல் கண்டெடுப்பு
தேசிய செய்திகள்

கொல்கத்தா மருத்துவமனையில் பெண் முதுகலை பயிற்சி மருத்துவரின் உடல் கண்டெடுப்பு

தினத்தந்தி
|
9 Aug 2024 4:58 PM IST

பெண் பயிற்சி மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றின் கருத்தரங்கு மண்டபத்தில் பணியில் இருந்த பெண் முதுகலை பயிற்சி மருத்துவரின் அரை நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இறந்த பெண் ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரியில் இருதய மருந்தியல் பிரிவில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இரவு பயிற்சி பணியில் இருந்த அவரின் உடல் காலையில் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை கருத்தரங்கு கூடத்தில் இருந்ததாக சக மாணவர்கள் எங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த பெண்ணின் உடல் அரை நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடலில் காயங்கள் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து நேற்று இரவு அவருடன் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனையில் இருக்கும் பிறரிடமும் விசாரித்து வருகிறோம்" என்றார்.

மேலும் செய்திகள்