< Back
தேசிய செய்திகள்
துங்கா அணையில் படகு சவாரி; ராகவேந்திரா எம்.பி. தொடங்கி வைத்தார்
தேசிய செய்திகள்

துங்கா அணையில் படகு சவாரி; ராகவேந்திரா எம்.பி. தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
1 July 2022 9:20 PM IST

சிவமொக்கா அருகே உள்ள துங்கா அணையில் படகு சவாரியை ராகவேந்திரா எம்.பி. தொடங்கி வைத்தார்.

சிவமொக்கா;


சிவமொக்கா அருகே காஜனூரில் துங்கா அணை உள்ளது. இந்த அணை அருகே சக்ரேபைலு யானைகள் முகாமும் அமைந்துள்ளது. இந்த யானைகள் முகாமிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் யானைகள் பயிற்சி முகாம் பின்புறத்தில் உள்ள துங்கா அணையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு சவாரி தொடங்க சுற்றுலாத்துறை முடிவு செய்தது.

இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று துங்கா அணையில் படகு சவாரி தொடங்கி உள்ளது. இந்த படகு சவாரியை சிவமொக்கா தொகுதி எம்.பி. ராகவேந்திரா தொடங்கி வைத்தார்.

படகு சவாரி செல்பவர்களுக்கு பாதுகாப்பு கவச உடையும் வழங்கப்பட உள்ளது. துங்கா ஆற்றில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்