< Back
தேசிய செய்திகள்
பி.எம்.டி.சி. பஸ் மோதி 2 தொழிலாளர்கள் சாவு
தேசிய செய்திகள்

பி.எம்.டி.சி. பஸ் மோதி 2 தொழிலாளர்கள் சாவு

தினத்தந்தி
|
16 Jun 2023 12:15 AM IST

பி.எம்.டி.சி பஸ் மோதி 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.

ராஜாஜிநகர்:-

துமகூருவை சேர்ந்தவர் திம்மேகவுடா. இதேபோல் கொப்பல் மாவட்டத்தை சேர்ந்தவர் பூஜாரி. இவர்கள் 2 பேரும் பெங்களூரு ராஜாஜிநகர் போக்குவரத்து போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கெம்பேகவுடா நகர் அருகே சாலையில் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக பி.எம்.டி.சி. (அரசு) பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அங்கிருந்த குறுக்கலான சாலையில் பஸ் சென்றது. அப்போது அந்த சாலையில் நடந்து சென்ற திம்மேகவுடா, பூஜாரி ஆகியோர் மீது பஸ் மோதியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் உடனடியாக ராஜாஜிநகர் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அந்த பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் என்பதும், பொருட்கள் வாங்குவதற்கு நடந்து சென்றபோது பஸ் மோதி உயிரிழந்ததும் தெரிந்தது. இதையடுத்து பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்