< Back
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசம்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பேர் பலி
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசம்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பேர் பலி

தினத்தந்தி
|
3 Oct 2024 11:07 AM IST

உத்தரபிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் சிரோலி கிராமத்தில் பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்து நேற்று திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் நசீர் என்பவர் பெயரில் பட்டாசு ஆலை நடத்தப்பட்டு வந்ததும், ஆலை அமைக்க அங்கீகாரம் பெற்ற இடத்தில் அல்லாமல் உறவினர் வீட்டில் பட்டாசு ஆலையை நடத்தியதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்