< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இமாசல பிரதேசத்தில் ஸ்மிரிதி இரானிக்கு காங்கிரசார் கருப்புக்கொடி
|18 Sept 2022 8:30 AM IST
சிம்லா,
மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி நேற்று இமாசல பிரதேசத்தின் ராம்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்ேகற்க சென்றார். இதற்காக ராம்பூர் சென்ற அவரை திடீெரன காங்கிரசார் சூழ்ந்து கருப்புக்கொடி காட்டினர்.
கடந்த ேதர்தலின்ேபாது கியாஸ் சிலிண்டர் உள்பட பெண்களின் அன்றாட சமையல் பொருட்களுக்கான விலையை குறைப்பதாக அவர் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அது தொடர்பாக எந்த நடவடிக்ைகயும் எடுக்காததை கண்டித்து இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
அமைதியான முறையில் போராட்டத்தை நடத்திய அவர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.