< Back
தேசிய செய்திகள்
இப்தார் விருந்தில் மன்மோகன் சிங்குடன் தலைமை நீதிபதி பங்கேற்றது சரியா? பாஜக கேள்வி
தேசிய செய்திகள்

இப்தார் விருந்தில் மன்மோகன் சிங்குடன் தலைமை நீதிபதி பங்கேற்றது சரியா? பாஜக கேள்வி

தினத்தந்தி
|
14 Sept 2024 8:41 AM IST

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றது விவாதத்தை ஏற்படுத்தியுள்ள பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் டெல்லி வீட்டில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பூஜை செய்தார்.இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இருந்தன.சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வீட்டு நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவர் அளித்த இப்தார் விருந்தில் அப்போதைய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் அழைக்கப்பட்டிருந்தார். இப்தார் விருந்தில் பிரதமரும் தலைமை நீதிபதியும் பேசும்போது எடுத்த புகைப்படத்தை பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஜாத் பூனாவாலா பகிரந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,''நீதித்துறை பத்திரமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் அப்போது நினைத்தன. இப்போது சமரசம் செய்துகொண்டதாக கருதுகின்றன'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்