< Back
தேசிய செய்திகள்
தத்தா குகை கோவிலை பாதுகாப்பதே  பா.ஜனதாவின் குறிக்கோள்மத்திய மந்திரி ஷோபா பேட்டி
தேசிய செய்திகள்

தத்தா குகை கோவிலை பாதுகாப்பதே பா.ஜனதாவின் குறிக்கோள்மத்திய மந்திரி ஷோபா பேட்டி

தினத்தந்தி
|
2 Sept 2023 12:15 AM IST

தத்தா குகைக்கோவிலை பாதுகாப்பதே பா.ஜனதாவின் குறிக்கோள் என்று மத்திய மந்திரி ஷோபா கூறினார்.

சிக்கமகளூரு:-

பவுர்ணமி பூஜை

சிக்கமகளூரு மாவட்டம் பாபாபுடன்கிரி மலையில் தத்தா குகைக்கோவில் அமைந்துள்ளது. அங்கு தத்தா பாதம் அமைந்திருக்கிறது. நேற்றுமுன்தினம் மத்திய மந்திரி ஷோபா தத்தா குகைக்கோவிலுக்கு வந்தார். அவர் அங்கு நடந்த பவுர்ணமி பூஜை யாகத்தில் கலந்து கொண்டார். பூஜை முடிந்த பின்னர் அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தத்தா குகைக்கோவிலை பாதுகாப்பதே எங்களது(பா.ஜனதா) குறிக்கோள். தத்தா பாதத்துக்கு அர்ச்சகரை கொண்டு பூஜை செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக கனவு கண்டோம். அந்த கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது. இனி நிரந்தரமாக 3 நேரமும் தத்தா பாதத்துக்கு பூஜை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

வளர்ச்சி பணிகள்

தத்தா குகைக்கோவில் இந்துக்களுக்கு சொந்தமானது என்று கூறி பல போராட்டங்கள் நடத்தினோம். கடைசியில் அதில் வெற்றி கண்டுள்ளோம். எதிர்காலத்தில் குகையை சுற்றி வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு மத்திய மந்திரி ஷோபா கூறினார்.

மேலும் செய்திகள்