< Back
தேசிய செய்திகள்
பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று தொடங்குகிறது..!
தேசிய செய்திகள்

பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று தொடங்குகிறது..!

தினத்தந்தி
|
16 Jan 2023 8:47 AM IST

பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது.

புதுடெல்லி,

பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பாஜக முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள் உள்பட 350 பாஜக பிரமுகர்கள் பங்கேற்கின்றன. பிரதமர் மோடி இரண்டு நாள் நிகழ்வுகளிலும் கலந்துக் கொள்கிறார்.

அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து பாஜக தேசிய குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக் காலத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கவும், இந்த ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வியூகம் வகுப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

செயற்குழு கூட்டத்தின் முதல் நாளான இன்று பிரதமர் மோடி, டெல்லியில் திறந்த வாகனத்தில் பேரணி செல்கிறார். இதையொட்டி டெல்லி நகர சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்