< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்
தேசிய செய்திகள்

ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்

தினத்தந்தி
|
3 Dec 2023 11:31 AM IST

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ஐதராபாத்,

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதில் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. சத்தீஷ்காரில் ஆட்சியை பிடிப்பதில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி மேளதாளத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி ராஜஸ்தானில் பாஜக 109 இடங்களை பிடித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக 155 இடங்களை பிடித்துள்ளது

மேலும் செய்திகள்