< Back
தேசிய செய்திகள்
கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதை தடுத்த மாவட்ட பாஜக தலைவரின் மகனுக்கு கத்தி குத்து
தேசிய செய்திகள்

கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதை தடுத்த மாவட்ட பாஜக தலைவரின் மகனுக்கு கத்தி குத்து

தினத்தந்தி
|
7 July 2022 1:07 AM IST

ராஜஸ்தானில் பாஜக கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதை தடுத்த மாவட்டத் தலைவரின் மகனை கத்தியால் குத்திய தொண்டர் கைது செய்யப்பட்டார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்ட பாஜக தலைவராக இருப்பவர் மான்சிங். இவரது மகன் அரவிந்த் சிங். நேற்று ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கார்த்திக் என்ற கட்சி தொண்டர் வந்துள்ளார். அவரை கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல விடாமல் அரவிந்த் சிங் தடுத்துள்ளார்.

இதனால் ஆத்தரமடைந்த கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அரவிந்தை சரமாரியாக குத்தினார். இதில் காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்துள்ளனர். அங்கு அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கார்த்திக்கை கைது செய்துள்ளனர். அவர் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்