< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் பா.ஜ.க. பெரும் தோல்வியை சந்திக்கும் - சச்சின் பைலட்
தேசிய செய்திகள்

'கர்நாடகத்தில் பா.ஜ.க. பெரும் தோல்வியை சந்திக்கும்' - சச்சின் பைலட்

தினத்தந்தி
|
12 May 2023 6:59 PM IST

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று சச்சின் பைலட் கூறினார்.

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர்கள் நலன் மற்றும் ஊழல் தொடர்பான விவகாரங்கள் குறித்து கவனம் ஈர்க்கும் விதமாக அம்மாநிலத்தின் முன்னாள் துணை முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சச்சின் பைலட் 5 நாள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நடைபயணத்தின் போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, கர்நாடக மாநில தேர்தல் குறித்து சச்சின் பைலட் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

"காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். பா.ஜ.க. மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ராஜஸ்தானில் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்பட பா.ஜ.க. தவறிவிட்டது. அதனால், அவர்கள் இங்கு எந்த தடயமும் இல்லாமல் போய்விடுவார்கள். கர்நாடகாவிலும் பா.ஜ.க. பெரும் தோல்வியை சந்திக்கும்" என்று சச்சின் பைலட் கூறினார்.

மேலும் செய்திகள்