< Back
தேசிய செய்திகள்
இந்திய மக்களால் பாஜக தோற்க்கடிக்கப்படும் -  ராகுல்காந்தி பேச்சு
தேசிய செய்திகள்

இந்திய மக்களால் பாஜக தோற்க்கடிக்கப்படும் - ராகுல்காந்தி பேச்சு

தினத்தந்தி
|
4 Jun 2023 9:51 AM GMT

பாஜகவின் வெறுப்புணர்வு காரணமாக இந்திய மக்கள் பாஜக-வை தோற்கடிப்பார்கள் என ராகுல்காந்தி கூறினார்.

நியூயார்க்,

கடந்த மாதம் கர்நாடகாவில் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி பாஜக-வை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது.

நியூயார்க்கில் இந்த வெற்றியினை சுட்டிக்காட்டி பேசிய ராகுல் காந்தி.....கர்நாடகாவில் பாஜக-வை காங்கிரஸ் மட்டும் வீழ்த்தவில்லை. மக்களும் தான் வீழ்த்தினர். இதைப்போன்று வரும் தெலுங்கானா தேர்தலிலும் பாஜக-வை தோற்கடித்து காங்கிரஸ் கர்நாடகாவைப்போல் வெற்றி பெறும்.

அதன்பிறகு வருகின்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் தேர்தலிலும் காங்கிரஸ் இதை செய்யும். தெலுங்கானா தேர்தலுக்கு பின்னர் பாஜக-வை கண்டுபிடிப்பது கூட கடினமாகலாம். இதனை இந்திய மக்களே செய்வார்கள்.

பாஜகவிற்கு எதிராக இது ஒரு சித்தாந்த போராட்டம். ஒருபக்கம் ,வெறுப்பு நிறைந்த பாஜக உள்ளது. மறுபக்கம் அன்பான காங்கிரஸ் கட்சி இருக்கிறது. இதன் காரணமாக இந்திய மக்கள் பாஜக-வை தோற்கடிக்கப் போகிறார்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்