< Back
தேசிய செய்திகள்
எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க பா.ஜனதா முயற்சி: ராப்ரிதேவியிடம் விசாரணைக்கு பிரியங்கா கண்டனம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க பா.ஜனதா முயற்சி: ராப்ரிதேவியிடம் விசாரணைக்கு பிரியங்கா கண்டனம்

தினத்தந்தி
|
7 March 2023 12:50 AM IST

எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

லாலுபிரசாத் யாதவ் மனைவி ராப்ரிதேவியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க பா.ஜனதா விரும்புகிறது. பா.ஜனதாவுக்கு அடிபணிய விரும்பாத எதிர்க்கட்சி தலைவர்கள், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. மூலமாக துன்புறுத்தப்படுகிறார்கள். இன்று ராப்ரிதேவி துன்புறுத்தப்பட்டுள்ளார். லாலுபிரசாத்தும், அவருடைய குடும்பமும் அடிபணிய மறுப்பதால், பல ஆண்டுகளாக துன்புறுத்தப்பட்டு வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட் அளித்த பேட்டியில், ''அதானி வீட்டில் சோதனை நடத்தப்படாதது ஏன்?'' என்று கேள்வி விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்