< Back
தேசிய செய்திகள்
உண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைகளை பாஜக பயன்படுத்துகிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

உண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைகளை பாஜக பயன்படுத்துகிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
27 Jun 2022 5:19 PM GMT

உண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைகளை பாஜக பயன்படுத்துகிறது என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றசம் சாட்டியுள்ளார்.

கொல்கத்தா,

உண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைகளை பாஜக பயன்படுத்துகிறது என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றசம் சாட்டியுள்ளார்.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:-

மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக உண்மை பேசுபவர்களை பாஜக அரசு குறிவைப்பதாகக் குறிப்பிட்டார். எளிய மக்களாக இருந்தாலும், அவர்களை துன்புறுத்துகின்றனர். மத்திய அரசின் இந்த செயல்பாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளில் எளிய மக்களும், தொழில்துறையினரும் லட்சக்கணக்கில் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

தனக்கு என்ன தேவையோ அதை அடைய பாஜக அரசு எதையும் செய்யும், இதற்காகவே, உண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது.

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு சம்மன் அனுப்பியுள்ள அமலாக்கத்துறை, நிதி மோசடி வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இதேபோல், சமூக ஆர்வலரான தீஸ்தா செதல்வாத், குஜராத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்