< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த பா.ஜ.க. முயற்சி:  கார்கே குற்றச்சாட்டு
நாடாளுமன்ற தேர்தல்-2024

தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த பா.ஜ.க. முயற்சி: கார்கே குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
22 March 2024 12:14 AM IST

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன் அனைத்து வழிகளிலும் மற்றும் சட்டவிரோத வகையிலும் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது என கார்கே கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன் அனைத்து வழிகளிலும் மற்றும் சட்டவிரோத வகையிலும் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது என கார்கே கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு, ஆளும் பா.ஜ.க. தேசிய ஜனநாயக கூட்டணி பெயரில் அரசியல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. மற்றொருபுறம், இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த சூழலில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அமலாக்க பிரிவு அதிகாரிகளால் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், ஆணவம் கொண்ட பா.ஜ.க. ஒவ்வொரு நாளும் வெற்றி பற்றிய பொய்யான விசயங்களை கூறி வருகிறது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன் அனைத்து வழிகளிலும் மற்றும் சட்டவிரோத வகையிலும் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது.

அவர்களுக்கு வெற்றி மீது உண்மையான நம்பிக்கை இருந்திருக்கும் என்றால், அரசியலமைப்பு மையங்களை தவறாக பயன்படுத்தி, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் கணக்குகள் முடக்கப்பட்டு இருக்காது. தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

உண்மை என்னவென்றால், வரவுள்ள தேர்தல் முடிவுகளை பற்றி தெரிந்து, பா.ஜ.க. முன்பே பயந்து போய் விட்டது. அதனால், அச்சத்தினால் அனைத்து வழிகளிலும் எதிர்க்கட்சிகளுக்கு தொந்தரவுகளை கொடுத்து கொண்டே இருக்கிறது. இது மாற்றத்திற்கான நேரம். இந்த முறை அதிகாரத்தில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கார்கே தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்