< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அரசியல் சாசனத்தை காக்கப்போவதாக கூறிய சோனியா காந்திக்கு பா.ஜ.க. கண்டனம்
|12 April 2023 1:47 AM IST
அரசியல் சாசனத்தை காக்கப்போவதாக கூறிய சோனியா காந்திக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆங்கில பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் மத்திய பா.ஜ.க. அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியதுடன், அரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒருமித்த எண்ணம் கொண்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் கை கோர்த்து செயல்பட தயார் என்று அறிவித்துள்ளார்.
இதற்கு பா.ஜ.க. தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
அந்த கட்சி சார்பில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்த பதிவில் அவர், "சோனியா காந்தி அரசியல் சாசனத்தை பற்றி வெகுவாக பேசி இருக்கிறார். நீதித்துறையின் சுதந்திரம் பற்றி காங்கிரஸ் கட்சி பேசுகிறது. இது நேர்மையற்ற மாயையான அறிக்கை" என சாடி உள்ளார்.