< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பா.ஜனதா தேசிய செயற்குழு: ஐதராபாத்தில் ஜூலை 2-ந் தேதி கூடுகிறது
|2 Jun 2022 1:51 AM IST
ஐதராபாத்தில் பா.ஜனதா தேசிய செயற்குழு வரும் ஜூலை 2-ந் தேதி கூடுகிறது.
புதுடெல்லி,
பா.ஜனதாவில் முக்கிய முடிவு எடுக்கும் அமைப்பாக தேசிய செயற்குழு இருக்கிறது. அதில், நாடு முழுவதும் உள்ள பா.ஜனதா மூத்த தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் நடக்கிறது. ஜூலை 2 மற்றும் 3-ந் தேதிகளில் இக்கூட்டம் நடக்கிறது.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மேலிட தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். தெலுங்கானாவை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு பெரும் சவாலாக உருவெடுக்க பா.ஜனதா விரும்புவதால், தேசிய செயற்குழு கூட்டத்தை ஐதராபாத்தில் நடத்துவதாக கருதப்படுகிறது.