< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கடந்த நிதியாண்டில் பா.ஜ.க. ரூ.1,917 கோடி நன்கொடை பெற்றது - காங்கிரசுக்கு ரூ.541 கோடி கிடைத்தது
|18 Jan 2023 1:41 AM IST
கடந்த நிதியாண்டில் பா.ஜ.க. ரூ.1,917 கோடி நன்கொடை பெற்றதாகவும், காங்கிரசுக்கு ரூ.541 கோடி கிடைத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2021-22-ம் நிதியாண்டில், அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரத்தை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
அதன்படி, ஆளுங்கட்சியான பா.ஜ.க., மொத்தம் ரூ.1,917.12 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பெற்றது ரூ.1,033.7 கோடி ஆகும். அக்கட்சியின் செலவினமாக ரூ.854.46 கோடி இருந்துள்ளது.
பா.ஜ.க.வுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி ரூ.541.27 கோடி நன்கொடை பெற்றது. அதன் செலவுக்கணக்கு ரூ.400.41 கோடியாக இருந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி பெற்ற நன்கொடை ரூ.2.87 கோடியாகவும், செலவு ரூ.1.18 கோடியாகவும் இருந்தது.