ராஜஸ்தானில் சி.எம். வேட்பாளரை தேடி அலைகிறார் மோடி... பிரியங்கா காந்தி கிண்டல்
|அரசியலில் உணர்வுகளையும் மதத்தையும் பயன்படுத்தினால் அவர்களிடம் மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என பிரியங்கா தெரிவித்தார்.
ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ராஜஸ்தான் மாநிலம் சக்வாடாவில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக சிதறிவிட்டது. முதல்-மந்திரி பதவிக்கான வேட்பாளர் யாரும் இல்லை. பிரதமர், மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் செல்கிறார். அவ்வாறு செல்வது, சில சமயங்களில் அவர் தனது முதல்-மந்திரி வேட்பாளரை தேடுவது போல் தெரிகிறது.
அரசியலில் உணர்வுகளையும் மதத்தையும் பயன்படுத்தினால் அவர்களிடம் மக்கள் கவனமாக இருக்கவேண்டும். பணவீக்கத்தால் விவசாயிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
200 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு வரும் 25ம் தேதி தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த மாநிலத்தில் இப்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. வரும் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சியினர் தீவிர களப்பணியாற்றி வருகிறார்கள்.