இரண்டு நாள் பயணமாக கர்நாடகா செல்கிறார் ஜே.பி.நட்டா
|சட்டசபைத் தேர்தலை சந்திக்க உள்ள கர்நாடகாவுக்கு இரண்டு நாள் பயணமாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா செல்ல உள்ளார்.
பெங்களூரு,
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பிப்ரவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கர்நாடகாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார், மேலும் ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் நடைபெறக்கூடிய சட்டசபை தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தி வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கர்நாடகாவின் பாஜக பொதுச் செயலாளர் என்.ரவிக்குமார் கூறுகையில், "பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று (பிப்ரவரி 19) இரவு மங்களூருக்கு வருகை தரவுள்ளார். அவர் அடுத்த இரண்டு நாட்களில் கர்நாடகத்தின் உடுப்பி, சிக்கமகளூரு மற்றும் ஹாசன் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
நாளை (பிப்ரவரி 20) காலை உடுப்பியில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். அதன்பின், மதியம் பிந்தூரில் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள உள்ளார். மாலை சிக்கமகளூரில் நடைபெறும் கூட்டத்திலும் கலந்து கொள்ள உள்ளார். நாளை மறுநாள் ஹாசன் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். உடுப்பி மற்றும் சிக்கமகளூருவில் பாஜக வலுவாக உள்ளது. ஆனால், சிக்கமகளூரின் சிரிங்கேரியில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்துகிறது. அங்கும் ஜே.பி.நட்டா பார்வையிட உள்ளார். பின்னர், விமானம் மூலம் டெல்லிக்குத் திரும்புகிறார்" என்று அவர் கூறினார்.