< Back
தேசிய செய்திகள்
சிவன் கோவில் வளாகத்தை சுத்தம் செய்த பாஜக ஜனாதிபதி வேட்பாளா் திரவுபதி முர்மு

Image Courtesy: PTI 

தேசிய செய்திகள்

சிவன் கோவில் வளாகத்தை சுத்தம் செய்த பாஜக ஜனாதிபதி வேட்பாளா் திரவுபதி முர்மு

தினத்தந்தி
|
22 Jun 2022 1:15 PM GMT

பாஜக ஜனாதிபதி வேட்பாளா் திரவுபதி முர்மு கோவில் வளாகத்தை கூட்டி சுத்தம் செய்தாா்.

புவனேஷ்வா்,

இந்திய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடியின சமூகத்தை சேர்ந்த திரவுபதி முர்மு போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டது.

இவா், ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் (2000-2004) வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை மந்திரியாகவும், கால்நடை வளர்ச்சித் துறை மந்திரியாகவும் இருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு மே 18ம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி வரை ஜார்க்கண்ட் கவர்னராக பதவி வகித்தார்.

இவா் வருகிற சனிக்கிழமை ஜனாதிபதி தோ்தலில் வேட்பு மனு தாக்குதல் செய்ய உள்ளாா்.

இந்த நிலையில், டெல்லி செல்வதற்கு முன்பு தான் முதன்முதலாக போட்டியிட்டு வென்ற ரெய்ரங்பூா் தொகுதியில் உள்ள பல்வேறு கோவிலுக்கு தனது குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுடன் சென்று வழிபாடு நடத்தினாா்.

அப்போது அங்குள்ள புரந்தேஸ்வாி சிவன் கோவில் வளாகத்தை கூட்டி சுத்தம் செய்தாா். திரவுபதி முர்மு ஜார்கண்ட் கவர்னராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவரது சொந்த ஊாில் உள்ள கோவிலை தினமும் சுத்தம் செய்து வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளாா்.

மேலும் செய்திகள்