< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இன்று நடக்கிறது பா.ஜனதா நாடாளுமன்ற கட்சி கூட்டம்..!!
|7 Dec 2023 2:36 AM IST
பா.ஜனதா நாடாளுமன்ற கட்சியின் கூட்டம், பொதுவாக நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது ஒவ்வொரு வாரமும் நடைபெறும்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரின்போது பா.ஜனதா நாடாளுமன்ற கட்சியின் முதல் கூட்டம் இன்று நடக்கிறது. இதில், 3 மாநில தேர்தல்களில் கட்சியை வெற்றிபெற வைத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது.
பா.ஜனதாவின் அனைத்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களை உள்ளடக்கிய பா.ஜனதா நாடாளுமன்ற கட்சியின் கூட்டம், பொதுவாக நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது ஒவ்வொரு வாரமும் நடைபெறும்.
அந்த கூட்டங்களில் பிரதமர் மோடி உள்ளிட்டோர், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பான முக்கிய விஷயங்கள் மற்றும் கட்சியின் நிறுவன மற்றும் அரசியல் பிரசார திட்டங்கள் குறித்து பேசுகின்றனர்.