< Back
தேசிய செய்திகள்
வாரிசு அரசியலை பா.ஜ.க. எதிர்க்கிறது - மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ்
தேசிய செய்திகள்

'வாரிசு அரசியலை பா.ஜ.க. எதிர்க்கிறது' - மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ்

தினத்தந்தி
|
30 April 2024 10:13 PM IST

வாரிசு அரசியலை பா.ஜ.க. எதிர்ப்பதாக மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

போபால்,

சமூகத்தின் அனைத்து பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் பா.ஜ.க. வாய்ப்பு வழங்கியுள்ளதாகவும், வாரிசு அரசியலை பா.ஜ.க. எதிர்ப்பதாகவும் மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரி மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

"ஒரே குடும்பம், ஒரே சமூகத்தில் இருந்து தலைவர்களை உருவாக்குவது வாரிசு அரசியலாகும். அதை பா.ஜ.க. எதிர்க்கிறது. அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். சமூகத்தின் அனைத்து பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் பா.ஜ.க. வாய்ப்பு வழங்கியுள்ளது.

யாதவ் சமுதாயத்தைச் சேர்ந்த என்னை முதல்-மந்திரியாக்கி பா.ஜ.க. இதை நிரூபித்துள்ளது. எனக்கு முன்பு பாபுலால் கவுர், பா.ஜ.க.வால் முதல்-மந்தியாக்கப்பட்டார். பா.ஜ.க.வால் மட்டுமே இதை செய்ய முடியும். இதனால் மக்களுக்கு பா.ஜ.க. மீது நம்பிக்கை ஏற்படுகிறது.

யாதவ் சமுதாயம் மட்டுமின்றி அனைத்து சமுதாயங்களையும் ஒன்றிணைக்கவே நான் முதல்-மந்தியாக பதவியேற்றுள்ளேன். என் மீது கட்சி நம்பிக்கை வைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் மோடிக்கு ஆதரவாக இருக்கின்றனர். அவர் 3-வது முறை பிரதமராக பதவியேற்று தனது நல்லாட்சியை தொடர்வார் என நம்புகிறேன்."

இவ்வாறு மோகன் யாதவ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்