< Back
தேசிய செய்திகள்
பகுஜன் சமாஜ் எம்.பி.யை அநாகரிகமாக பேசிய பா.ஜ.க எம்.பி., ஜே.பி.நட்டாவுடன் சந்திப்பு
தேசிய செய்திகள்

பகுஜன் சமாஜ் எம்.பி.யை அநாகரிகமாக பேசிய பா.ஜ.க எம்.பி., ஜே.பி.நட்டாவுடன் சந்திப்பு

தினத்தந்தி
|
26 Sept 2023 4:39 AM IST

பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நேற்று கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை ரமேஷ் பிதுரி எம்.பி. சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, மக்களவையில் பேசிய பா.ஜ.க எம்.பி. ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலிக்கு எதிராக அநாகரிகமான வார்த்தைகளை கூறினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தன. இந்த விவகாரத்தில் அரசு சார்பிலும் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு ரமேஷ் பிதுரிக்கு பா.ஜ.க மேலிடம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நேற்று கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை ரமேஷ் பிதுரி எம்.பி. சந்தித்து பேசினார்.

அப்போது இருவரும் என்ன பேசினார்கள்? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. முன்னதாக, ரமேஷ் பிதுரி எம்.பி.க்கு ஆதரவாகவும், பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலிக்கு எதிராகவும் பல்வேறு பா.ஜ.க எம்.பி.க்கள் சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்