< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தன்பாலின ஈர்ப்பு திருமணங்கள் அழிவை ஏற்படுத்தும்: பாஜக கடும் எதிர்ப்பு
|19 Dec 2022 5:52 PM IST
தன்பாலின திருமணம் அழிவுக்கு வழி வகுத்து விடும் என்றும் இதை இரண்டு நீதிபதிகள் மட்டுமே முடிவு செய்யக் கூடாது எனவும் மாநிலங்களவையில் பாஜக எம்.பி சுஷில்மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மாநிலங்களவையில் பேசிய பாஜக எம்.பி சுஷில் மோடி கூறியதாவது:
ஒரே பாலினத்தவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வது என்பது சமூக கட்டமைப்பை உடைக்கும் செயல். சுப்ரீம் கோர்ட்டின் வெறும் 2 நீதிபதிகள் இதுபோன்ற விவகாரங்களை தீர்மானித்துவிட முடியாது . இது குறித்து நாடாளுமன்றத்திலும், சமூகத்திலும் விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். சுதந்திர மனப்பான்மை கொண்ட சிலர், இதுபோன்ற விஷயங்களில் மேற்கத்திய நாடுகளை அப்படியே பின்பற்றுகின்றனர்" என்றார்.