< Back
தேசிய செய்திகள்
அம்பாலா தொகுதி பா.ஜனதா எம்.பி. கட்டாரியா மரணம் அரியானாவில் அரசு துக்கம் அனுசரிப்பு
தேசிய செய்திகள்

அம்பாலா தொகுதி பா.ஜனதா எம்.பி. கட்டாரியா மரணம் அரியானாவில் அரசு துக்கம் அனுசரிப்பு

தினத்தந்தி
|
19 May 2023 2:15 AM IST

அரியானா மாநிலம் அம்பாலா தொகுதியின் பா.ஜனதா எம்.பி., ரத்தன்லால் கட்டாரியா.

சண்டிகார்,

அரியானா மாநிலம் அம்பாலா தொகுதியின் பா.ஜனதா எம்.பி., ரத்தன்லால் கட்டாரியா. முன்னாள் மத்திய மந்திரியான இவர் கடந்த சில நாட்களாக நிமோனியா உள்ளிட்ட உடல் நலக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இதற்காக சண்டிகாரில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கட்டாரியாவின் உடல்நிலை நேற்று முன்தினம் மோசமடைந்தது. எனவே அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ரத்தன்லால் கட்டாரியா காலமானார். அவருக்கு வயது 71. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் நேற்று மாலையில் இறுதிச்சடங்குகள் நடந்தன. முன்னதாக ரத்தன்லால் கட்டாரியாவின் மரணச்செய்தி கேட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ச்சியும், குடும்பத்தினருக்கு இரங்கலும் வெளியிட்டனர். அரியானா மாநில பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கட்டாரியாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநில அரசு நேற்று ஒருநாள் அரசு துக்கம் அனுசரித்தது.

மேலும் செய்திகள்