< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீதான பாலியல் புகார் மீது முழு விசாரணை: பா.ஜனதா எம்.பி. கோரிக்கை
|20 Jan 2023 2:48 AM IST
மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீதான பாலியல் புகார் மீது முழு விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது பாலியல் புகார் தெரிவித்து, பிரபல மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உள்பட 200 வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், இப்பிரச்சினை குறித்து பா.ஜனதா எம்.பி. பிரிஜேந்திர சிங் கூறியதாவது:-
நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதனால் இதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. மத்திய விளையாட்டு அமைச்சகம் இதை கையில் எடுத்து, மல்யுத்த கூட்டமைப்பிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இப்பிரச்சினையில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.