< Back
தேசிய செய்திகள்
பிபோர்ஜாய் புயலின் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த  கடற்கரையில் அமர்ந்து பூஜை செய்த பாஜக எம்.எல்.ஏ
தேசிய செய்திகள்

பிபோர்ஜாய் புயலின் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த கடற்கரையில் அமர்ந்து பூஜை செய்த பாஜக எம்.எல்.ஏ

தினத்தந்தி
|
11 Jun 2023 12:49 PM IST

அரப்பிக்கடலில் நிலைக்கொண்டுள்ள பிபோர்ஜாய் புயலை அமைதிப்படுத்த கடற்கரையில் அமர்ந்து பூஜை செய்த குஜராத் பாஜக எம்.எல்.ஏ. ப்ரத்யுமான்சிங் ஜடேஜா!

அகமதாபாத்,

மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள தீவிர புயலான 'பிபோர்ஜாய்', அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற உள்ளது. மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து, ஜூன் 15ம் தேதி பாகிஸ்தான் மற்றும் அதனை ஒட்டிய சவுராஷ்டிரா, கட்ச் கடற்கரை பகுதிகளை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பிபோர்ஜாய் புயாலால் அரபிக்கடலில் ஆக்ரோஷமாக அலைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில், அரப்பிக்கடலில் நிலைக்கொண்டுள்ள பிபோர்ஜாய் புயலை அமைதிப்படுத்த குஜராத் பாஜக எம்.எல்.ஏ. ப்ரத்யுமான்சிங் ஜடேஜா கடற்கரையில் அமர்ந்து பூஜை செய்தார். இவர் பூஜை செய்த செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெய்வத்தின் ஆசீர்வாதங்கள் மற்றும் தலையீட்டை நாடுவதன் மூலம், புயலை அமைதியான விளைவைக் கொண்டு வரவும், இப்பகுதியில் சூறாவளியால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க இது நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்