< Back
தேசிய செய்திகள்
பா.ஜனதாவினர் பசியுடன் திரியும் ஓநாய்கள் - அசோக் கெலாட் குற்றச்சாட்டு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பா.ஜனதாவினர் பசியுடன் திரியும் ஓநாய்கள் - அசோக் கெலாட் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
22 May 2023 12:42 AM IST

ஊழல் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் பா.ஜனதாவினர் பசியுடன் திரியும் ஓநாய்கள் என்றும் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரது அரசு மீது பா.ஜனதா ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியது குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது:-

ஊழல் குற்றச்சாட்டால் நாங்கள் பயப்பட போவது இல்லை. அவர்கள் சொல்வது பொய்.

பா.ஜனதா ஆளும் மாநிலங்களில்தான் அதிகமான ஊழல் நடக்கிறது. அங்கு ஊழல் 10 மடங்கு அதிகரித்துள்ளது. அவர்கள் பசியுடன் திரியும் ஓநாய் கூட்டமாக உள்ளனர். ஆட்சி அமைத்தவுடன், சாப்பிட தொடங்கி விடுகிறார்கள். அந்தந்த மாநிலத்தின் வளங்களை கொள்ளையடிக்கிறார்கள்.

இதை நான் சொல்லவில்லை. நீங்கள் எந்த தொழில் அதிபருடனும் பேசி இதை சரிபார்த்துக்கொள்ளலாம்.

கர்நாடக தேர்தல் முடிவில் இருந்து பா.ஜனதா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் 29 இடைத்தேர்தல்களில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்