பாஜக கங்கை நதியை போன்றது, பாவங்களில் இருந்து விடுபட கட்சியில் இணையுங்கள்: திரிபுரா முதல் மந்திரி
|பாஜக கட்சி கங்கை நதி போன்றது எனவும் அதில் இணைந்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம் எனவும் திரிபுரா முதல் மந்திரி பேசியுள்ளார்.
அகர்தலா,
இடதுசாரி தலைவர்கள் பாஜகவில் இணைய வேண்டும் என்று திரிபுரா முதல் மந்திரி மணிக் சஹா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பாஜக கங்கை நதியை போன்றது என்றும் கட்சியில் இணைவதன் மூலம் அனைத்து பாவங்களும் நீங்கும் எனவும் அவர் பேசியிருக்கிறார். இது தொடர்பாக மணிக் சஹா கூறியதாவது:- ஸ்டாலின் மற்ரும் லெனினின் சித்தாந்தங்களை இன்னமும் நம்பிக் கொண்டு இருப்பவர்கள் பாஜகவில் இணைய வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன்.
ஏனெனில் பாஜக ஒரு கங்கை நதி போன்றது. கங்கையில் புனித நீராடினால் உங்களின் அனைத்து பாவங்களும் நீங்கும். திரிபுராவில் கம்யூனிஸ்ட்களின் ஆட்சி நடைபெற்ற போது ஒடுக்குமுறைகள் அரங்கேறின. மக்களின் உரிமைகள் பல ஆண்டுகளாக நசுக்கப்பட்டன. 2018 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் மூலம் 25 ஆண்டு கால கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது" என்றார்.