< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரப்பிரதேசம்: மீரட்டை சேர்ந்த பாஜக தலைவர் கார் விபத்தில் பலி
|16 Oct 2022 10:32 PM IST
உத்தரப்பிரதேசத்தில் கார் விபத்தில் மீரட்டைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர் உயிரிழந்தார்.
சஹாரன்பூர்,
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள தியோபந்த் பகுதியில் இன்று பிக்-அப் வாகனம் மீது கார் மோதியதில் மீரட்டைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
சஹாரன்பூரிலிருந்து முசாபர்நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பிக்-அப் வாகனம், சைதாம் கோவில் அருகே வந்த போது பாஜக தலைவர் உள்ளிட்ட மற்றவர்கள் வந்து கொண்டிருந்த கார் மீது மோதியது.
இதையடுத்து விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு பாஜகவின் மீரட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவுரவ் சவுகான் (38) இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.