< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி - அதிர்ச்சி சம்பவம்
|1 Sept 2024 6:30 PM IST
சிறுமிக்கு பாஜக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் அல்மொரா மாவட்டம் சால்ட் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி பகவத்சிங் போரா. இவர் கடந்த 24ம் தேதி அதேபகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கடந்த 30ம் தேதி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாஜக நிர்வாகி பகவத்சிங் போராவை நேற்று இரவு கைது செய்தனர்.
இந்நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பகவத்சிங் போராவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக மாநில தலைமை உத்தரவிட்டுள்ளது.