< Back
தேசிய செய்திகள்
பாஜக மேற்கு வங்காள மக்களின் செய்தி தொடர்பாளராக மாறியுள்ளது - ஜே.பி.நட்டா
தேசிய செய்திகள்

பாஜக மேற்கு வங்காள மக்களின் செய்தி தொடர்பாளராக மாறியுள்ளது - ஜே.பி.நட்டா

தினத்தந்தி
|
29 Aug 2022 4:48 PM IST

மேற்கு வங்காள மக்களின் செய்தி தொடர்பாளராக பாஜக மாறிவிட்டதாக அக்கட்சியின் செய்தி தொடரபாளர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

அகர்தலா,

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாள் பயணமாக திரிபுரா மாநிலத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாஜக மேற்கு வங்காள மக்களின் செய்தி தொடர்பாளராக மாறிவிட்டது. மேலும், மாநிலத்தில் ஊழல் மற்றும் சட்டமீறலுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பும். இங்கு ஆளும் திரிணாமுல் அரசின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் அட்டூழியங்களுக்கு பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தலுக்கு பிறகு வன்முறை நடந்தது அனைவருக்கும் தெரியும். இங்கு திரிணாமுல் கட்சி சட்டத்தின் ஆட்சியை மீறுகிறது. இதனை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.

மேற்கு வங்காளத்தின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் என்ன நடந்தது என்பதை நினைத்து நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும். இங்கு பெண் முதல்-அமைச்சராக (மம்தா பானர்ஜி) இருந்தும் மனித கடத்தலில் மேற்கு வங்காளம் முதலிடத்தில் உள்ளது. என்று குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராடும் ஒரே அரசியல் சக்தி பாஜகதான். மேற்கு வங்காளத்தில் மக்களின் ஆதரவினால் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்