வாரிசு அரசியலில் இருந்து விடுபட்ட ஒரே கட்சி பாஜக தான் - ஜே.பி.நட்டா பேச்சு
|பிரதமராக மோடி ஆட்சிக்கு வந்த பின் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ராஜஸ்தானில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளைப் பாராட்டி பேசினார். அப்போது பேசிய அவர்,
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபிறகு தான் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. 2014க்கு முன் இந்தியாவில் 2ஜி & 3ஜி ஊழல்கள் என நிறைந்திருந்தது.
இந்தியா ஊழல் நாடாக அறியப்பட்டது, பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, உலகில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்தது. உலகில் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக திகழ்வதாகவும், நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் குடும்ப கட்சிகளாக மாறிவிட்டன, வாரிசு அரசியலில் இருந்து விடுபட்ட ஒரே கட்சி பாஜக தான்என அவர் கூறினார்.
மேலும் இந்தாண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, ராஜஸ்தானில் பாஜக தலைவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதேபோல் இன்று ஜெய்ப்பூரில் சவாய் ஸ்தல் காந்தி மைதானத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.