< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
'கூடாரத்தில் புகுந்த ஒட்டகம், பா.ஜனதா' - அ.தி.மு.க. விலகல் பற்றி கபில்சிபல் கருத்து
|27 Sept 2023 12:28 AM IST
பா.ஜனதா- அ.தி.மு.க. விலகல் குறித்து சுயேச்சை எம்.பி. கபில்சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. அறிவித்திருப்பது பற்றி முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை சுயேச்சை எம்.பி.யுமான கபில்சிபல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சியான அ.தி.மு.க. விலகி விட்டது. பா.ஜனதாவுடன் இன்னும் இருப்பவை எந்த கொள்கையும் இல்லாத சந்தர்ப்பவாத கூட்டணி கட்சிகள்தான்.
அதாவது, மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் போன்றவர்களின் கட்சிகளும், வடகிழக்கு மாநில அரசியல் கட்சிகளும்தான் உள்ளன. பா.ஜனதா, கூடாரத்தில் புகுந்த ஒட்டகம் போன்றது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.