< Back
தேசிய செய்திகள்
பா.ஜ.க. மாநில தலைவர் பதவி வழங்கினால் திறமையாக நிர்வகிப்பேன்-முன்னாள் மந்திரி சோமண்ணா பேட்டி
தேசிய செய்திகள்

பா.ஜ.க. மாநில தலைவர் பதவி வழங்கினால் திறமையாக நிர்வகிப்பேன்-முன்னாள் மந்திரி சோமண்ணா பேட்டி

தினத்தந்தி
|
23 Jun 2023 6:45 PM GMT

மேலிட தலைவர்களுக்கு கடிதம் எழுதியது உண்மை என்றும், பா.ஜ.க. மாநில தலைவர் பதவி வழங்கினால் திறமையாக நிர்வகிப்பேன் என்றும் முன்னாள் மந்திரி சோமண்ணா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

பெங்களூருவில் நேற்று முன்னாள் மந்திரி சோமண்ணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மாநில தலைவர் பதவி

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. ஆனால் நான் அந்த பதவிக்கு தகுதியானவன். மாநில தலைவர் பதவி வழங்கும்படி பா.ஜனதா மேலிட தலைவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மேலிட தலைவர்களிடம், மாநில தலைவர் பதவி வழங்கும்படி கேட்டு கடிதம் எழுதியது உண்மை தான். நான் பா.ஜனதாவுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகி விட்டது. எனக்கு 45 ஆண்டுகால அரசியல் அனுபவம் இருக்கிறது. பா.ஜனதா தலைமை கொடுத்த அனைத்து பணிகளையும் சிறப்பாக முடித்து கொடுத்துள்ளேன்.

மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் இல்லாத போது கூட கொடுத்த பணிகளை கூட வெற்றிகரமாக முடித்து கொடுத்திருக்கிறேன். மாநில தலைவர் பதவியை 100 நாட்கள் கொடுத்தாலும், 24 மணி நேரமும் அயராது உழைத்து கட்சியை வளர்ப்பதுடன், அனைத்து தரப்பினரையும் ஒன்றாக இணைத்து செயல்படுவேன். சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்தற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.

திறமையாக நிர்வகிப்பேன்

மாநில தலைவர் பதவி வழங்கினால் திறமையாக நிர்வகிப்பேன். நான் எப்போதும் கட்சியை தாய்க்கு நிகராக மதிப்பவன். பல்வேறு தேர்தல்களை சந்தித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. நிறைய தலைவர்களுடன் பழகிய அனுபவமும் இருக்கிறது. 100 நாட்கள் மட்டும் அவகாசம் கொடுக்கும்படி கேட்கவில்லை. எனது அனுபவத்தை பயன்படுத்தி கொள்ளும்படி கட்சி தலைமையிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.

சட்டசபை தேர்தலில் தோல்வி காரணமாக ஒரே இடத்தில் முடங்கி இருக்க விரும்பவில்லை. மாநில தலைவர் பதவி வழங்கினால், கர்நாடகத்தில் பா.ஜனதாவை வளர்ப்பதுடன், மாநிலத்தில் மாற்றத்தை உருவாக்கவும் தயாராக உள்ளேன். பா.ஜனதா தலைமை என்ன முடிவு எடுக்கிறது என்பது தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்